2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

சிறுவனின் உயிரை எடுத்தது பட்டம்

Editorial   / 2018 ஜனவரி 07 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பட்டம் ஏற்றச் சென்ற சிறுவன் ஒருவன், வயல் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று, யாழ்., ஆவரங்கால் பகுதியில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் மகா வித்தியாலயத்தில், தரம் 06இல் கல்வி கற்ற, ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த சதிஸ்குமார் லிஷாந் (வயது 11) எனும் சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறுவனின் பெற்றோர் வெளியே சென்றிருந்த சமயம், சிறுவன், வீட்டுக்கு அருகில் உள்ள வயல் தரவைக்குப் பட்டம் ஏற்றச் சென்றுள்ளான்.

வீடு திரும்பிய பெற்றோர் சிறுவனை காணாது உறவினர்களுடன் இணைந்து தேடிய போது, வீட்டுக்கு அருகில் உள்ள வயல் தரவைக் கிணற்றின் அருகில் பட்டமும் பட்டம் ஏற்றிய நூலையும் கண்டுள்ளனர்.

அதனை அடுத்து சிறுவனைத் தேடியபோது, கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், சடலத்தை மீட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X