Freelancer / 2024 மே 18 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் , இணுவில் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்களை நடத்திய உணவாக உரிமையாளர் மூவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் , அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.
இணுவில் பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் சி. சிவானுஜன் இணுவில் பகுதியில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டார்.
அதன்போது மூன்று உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த நிலையில் , குறித்த உணவக உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை தம் மீதான குற்றச்சாட்டுக்களை உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று , 25 ஆயிரம் , 15 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என மூவருக்கும் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. R
53 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
11 Jan 2026