2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சுதர்சிங் விஜயகாந்துக்கு கடூழியச் சிறை

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 08 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இவருக்கு, 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (08) உத்தரவிட்டார்.

அத்துடன், மேலும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்  தண்டனை வழங்கி நீதிவான் தீர்ப்பளித்தார்.

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடொன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட விஜயகாந் உட்பட இருவருக்கே 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீதவான் தனது தீர்ப்பில், “குற்றவாளிகள் மூவரும் தலா 7 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்க வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.

மேலும், தலைமறைவாகியிருந்த குறித்த வழக்கு தொடர்பான ஒருவருக்கு, பிடியாணை பிறப்பித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினரான விஜயகாந்தை குறித்த நடவடிக்கைகள் காரணமாக தமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி. நீக்கியது. அதனால் அவர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்தார். தற்போது அவரது கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .