2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுன்னாகம் பிரதேசசபைக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2019 மே 06 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன் 

யாழ்ப்பாணம் வலிதெற்கு சுன்னாகம் பிரதேசசபையில் குண்டுவைக்க உள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம் நிறுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பிரதேசசபைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று (06) காலை 10 மணியளவில் உடுவில் பிரதேச சபையில் அபிவிருத்தி தொடர்பாக விசேட கூட்டம் ஒன்று சபையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இந்நிலையில் பிரதேசசபையின் பொதுமக்கள் தொடர்பு அலுவலருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்மநபர் ஒருவர் கூட்டம் நடைபெற்றால் சபைக்குள் குண்டு வெடிக்கும் என அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து பிரதேசசபையால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதுடன் பிரதேசசபைக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகிறன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .