2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சுன்னாகம் பொதுநூலகத்தில் நவராத்திரி நிகழ்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொதுநூலகத்தில், நவராத்திரி சிறப்பு பூசை நிகழ்வுகள், திங்கட்கிழமை (07) நண்பகல் 12 மணிக்கு, பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, சிவாச்சாரியாரினால் சிறப்புப் பூசைக் கிரியைகள் நிகழ்த்தப்பட்டு, சகலகலாவல்லி மாலை பண்ணுடன் ஓதப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நவராத்திரி சிறப்பு இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருதனார்மடம் நுண்கலைக் கழகத்தின் மாணவன் சிவலிங்கேஸ்வரன் நிதர்ஷன் பக்கவாத்திய சகிதம் இசைக் கச்சேரி நிகழ்த்தினார்.

சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் திருமதி ஜெயலட்சுமி சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் க.தர்ஷன், வலி. தெற்குப் பிரதேச சபை, சுன்னாகம் பொதுநூலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X