Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தொடர்பில் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் ஒன்றான புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் தெரிவித்தார்.
இவ்வாறு சுமந்திரன் கூறி வருகின்றமை தவறு என்று சுமந்திரனுக்கு நேரடியாகவும் தெரிவிக்கப்படுமென்றும் குறிப்பிட்டிருக்கும் சித்தார்த்தன்; கடந்த கால அரசியலை கற்றுக் கொண்ட பின்னர் சுமந்திரன் பேச ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களுக்கு சமஷ்டி அமைப்பு தேவையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.ஆனால், அதன்பின்னர் சமஷ்டி தேவையில்லை என்று தான் கூறவில்லை என்றும் பின்னர் சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சுமந்திரனைப் பொறுத்தவரையில் சமஷ்டிக்குள் வரும் உள்ளடக்கங்கள் இருந்தால் போதும் சமஷ்டி அமைப்பு என்ற பெயர் தேவையில்லை என்ற தீவிர நிலைப்பாட்டில் உள்ளார். குறிப்பாக சமஷ்டி கருத்தாக்கம் இருக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக உள்ளர். இதனை பல தடவைகள் அவர் கூறியுள்ளார்.
சுமந்திரன் என்ன கூறினார் என்பதை விட கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் கடந்த மாகாண சபை, நாடாளுமன்ற தேர்தல் காலங்களின் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி அமைப்பின் கீழ்தான் நியாயமான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெளிவாகக் கூறியுள்ளோம். அதற்கமைய கூட்டமைப்பு தொடர்ந்தும் சமஷ்டியையே வலியுறுத்தி நிற்கும் என்பதைத் தான் இன்றும் கூறுகின்றோம். சமஷ்டி அல்லாத பொறிமுறையில் தமிழ் மக்களுக்கு தேவையான நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது.
நான் மிக நீண்ட காலமாக அரசியலில் நிலைத்திருக்கின்றேன். தந்தை செல்வா காலம் தொட்டே அரசியலில் நேரடியான ஈடுபாடுகளை கொண்டிருந்தவன் நான். திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவன். பிரேமதாஸவின் ஆட்சியில் நடத்தப்பட்ட அனைத்து கட்சிகளின் அரசியல் மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தேன். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய அரசமைப்பு வரைபுக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிலும் அங்கம் வகித்திருந்தேன். இதில் நடத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்குகொண்டு தமிழ் மக்களின் தரப்பில் நியாயப்பாடுகளை பதிவு செய்திருந்தேன்.
அந்த வகையில் நானும் சம்பந்தன் ஆகியோருமே நீண்ட காலம் தொட்டே அரசியலில் நிலைத்திருக்கின்றோம். இவ்வாறு பல விடயங்களை கற்றுத் தெரிந்து கொண்டுள்ளேன். அரசியல் ரீதியாக சமஷ்டி அமைப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை மிகத் தெளிவாக நான் அறிந்தும் உணர்ந்தும் வைத்துள்ளேன். இந்த விடயத்தில் எவருமே எனக்கு அறிவூட்டத் தேவையில்லை. போதிய அறிவு இருக்கின்றது.
சுமநத்திரக் கூறியதை நான் தவறாக எடுக்கவில்லை. சில வேளைகளில் அவருக்கு கடந்த கால அரசியல் பயணங்கள் எவ்வாறு இருந்தது என்று தெரியாமல் இருந்திருக்கலாம். இன்று பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களின் சரித்திரங்களை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக புளொட் ஆயுத இயக்கம் என்றும் எங்களுக்கு அரசியலே தெரியாது என்றும் நினைத்து பேசுகின்றார்கள். இது எங்களுடைய தவறு இல்லை. அவ்வாறு சொல்பவர்களின் தவறாகும். சுமந்திரன் இவ்வாறு பலதை சொல்லுவார். அவை அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அதற்கான நாங்கள் கூட்டமைப்பில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவுகளை எடுப்பதில்லை. அவருடன் பகைத்துக் கொள்வதும் இல்லை” என்றார்.
19 minute ago
40 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
44 minute ago