2025 மே 01, வியாழக்கிழமை

சுற்று மதிலை திறந்து வைத்தார் சிறீதரன் எம்.பி

Editorial   / 2022 ஜனவரி 13 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய சுற்று மதிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இன்று (13) திறந்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 06 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த மதில் அமைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் பங்கயற்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன், கரைச்சி கோட்டக் கல்வி அலுவலர் தர்மரத்தினம், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் சிறீஸ்குமார், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .