Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
சுழிபுரம் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், இவ்வழக்கின் சாட்சியாளரொருவரது மகள் முன்வைத்த கூற்றால், வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட சுழிப்புரம் மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் சப்பாத்துகள், தமது வீட்டுக்குள் இருந்ததாக, மேற்படி சாட்சியாளரது மகள், உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வழக்கு, மல்லாகம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில், நேற்று (21), விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அந்தச் சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரிடம் சாட்சியம் பெறப்பட வேண்டுமெனவும் அதன்மூலமே, இந்த வழக்கின் சரியானப் போக்கை உறுதிப்படுத்த முடியுமெனவும், பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
அத்துடன், 2ஆவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சுதாகரனும், இந்த விடயத்தை மன்றில் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் சார்பான விண்ணப்பதை ஏற்ற நீதவான், சம்பந்தப்பட்ட சிறுமியையும் வழக்கின் மற்றொரு சாட்சியான சிறுவனையும், எதிர்வரும் 4ஆம் திகதியன்று மன்றில் முன்னிலையாக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், அன்றைய தினம் வரை, சந்தேகநபர்களின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago