Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 23 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்கள், கட்டட இடிபாடுகளை கொண்டு நிரவப்பட்டு வருகின்றன.
செம்மணி யாழ்.வளைவு பகுதியை சூழவுள்ள நீரேந்து பகுதிகளாக உள்ள சதுப்பு நிலங்களை கற்கள், மண் மற்றும் கட்டட இடிபாடுகள் என்பவற்றை கொட்டி அப்பகுதியை மேடாக்கும் வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த நீரேந்து பிரதேசத்தினை மேடாக்கும் நடவடிக்கையால் , அயலில் உள்ள வயல்களில் நீர் தேங்கி நிற்பதனால் வயல்கள் அழிவடையும் நிலைமை காணப்படுகிறது.
ஏற்கனவே அப்பகுதிகளை விஷமிகள் குப்பைகளையும் , கழிவுகளையும் கொட்டி வருவதனால், சதுப்பு நிலப்பகுதிகள் பாதிக்கப்பட்டு சதுப்பு நில தாவரங்கள் அழிவடைந்து வரும் நிலையில், தற்போது அப்பகுதிகளில் கற்கள், கட்டட இடிபாடுகளை கொட்டி வருவதனால் சதுப்பு நிலங்களை முற்றாக அழிக்கும் செயற்பாடு என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
குறித்த பகுதியில், தனியார் சிலர் கடைகளை நிறுவதற்காக மேடாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குறித்த பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை நிறுவதற்கு தனியார் ஒருவர் முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் அதற்கு சமூக மட்டத்தில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago