2025 மே 15, வியாழக்கிழமை

சேகரிக்கப்பட்ட திண்மக் கழிவுகள் தீக்கிரை

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சாவகச்சேரி பிரதேச சபையினரால் தரம் பிரிப்பதற்காகச்  சேகரிக்கப்பட்ட திண்மக் கழிவுகள் விசமிகளால் தீ வைக்கப்பட்ட சம்பவமொன்று, சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கொயிலாமனை மயான வீதியில் அமைந்துள்ள திண்மக் கழிவுகள் தரம் பிரிக்கும் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபையினர் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் இருந்த திண்மக் கழிவுகளை அகற்றி, பிளாஸ்டிக், இரும்புகள், கண்ணாடி போத்தல்கள் ஆகியவற்றை தரம் பிரித்து, எஞ்சிய திண்மக் கழிவுகளை அதற்கென ஒதுக்கப்பட்ட அறுகுவெளி பிரதேசத்தில், பிரதேச சபைக்குரிய குப்பை மேட்டில் கொட்டிப் பரவுவதற்காக, கொயிலாமனை மயான வீதியில் அமைந்துள்ள நிலையத்தில் சேகரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட கழிவுகளே தீ வைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சாவகச்சேரி பிரதேச சபையின் ஊழியர்கள் தண்ணீர் பவுசர் மூலம் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டு, தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .