2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சேற்றில்மூழ்கி மாணவன் மரணம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கரவெட்டியில் குளக்கழிவுகளை அகற்றிய மாணவன், சேற்றில் சிக்கி  நேற்று உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவர்,கடுக்காய் - கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயர்தரம் கற்கும் குறித்த மாணவன், சக நண்பர்களுடன் குளம் ஒன்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோதே சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுணாவில் குளக்கட்டுப் பிள்ளையார் கோவிலடி குளத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது நிலைதடுமாறி லக்சன் குளத்தின் உள்ளே விழுந்தார் என்றும், அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கைகைகளை விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கிருந்து ஓடிச்சென்று நீச்சல் தெரிந்தவர்களை அழைத்து வருவதற்கு முன்பாகவே மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .