Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, சென்னையில் கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களின் சுகாதார நலனை கருத்தில்கொண்டு இலங்கையிலிருந்து வைத்தியர் குழுவுவொன்று சென்னைக்கு செல்லவுள்ளதாக தெரியவருகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நோய்களில் இருந்து பாதுகாக்கும் இவ் வைத்தியர் குழு, யாழ்ப்பாணம் றொட்டறிக்கழத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டுக்குச் செல்லவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கையிலிருநு;து புறப்படும் இக்குழு, திங்கட்கிழமை முதல்(14) சென்னை மற்றும் கடலூர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இக்குழுவின் ஒரு பகுதியினர், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தின் கொன்சலர் ஜெனரல் நடராஜனை சந்தித்தனர்.
இதன்போது விசா மற்றும் பயண ஏற்பாடுகள் தொடர்பாகவும் தமிழ்நாட்டில் நடத்தவுள்ள மருத்துவ முகாம்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அவர், 'இந்திய மத்திய அரசின் கொள்கையின் பிரகாரம் அனர்த்த நிவாரணத்துக்கான உதவிகள் எதனையும் தன்னால் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியாதெனவும், றொட்டறிக் கழகம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக தேவையானவற்றை இங்குள்ளவர்கள் தமிழ்நாட்டிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யமுடியும்' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago