2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சாவகச்சேரியில் பெண் எரியூட்டிக் கொலை

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சாவக்கச்சேரி, நாவற்குழி பிரதேசத்தில், பெண்ணொருவர்  எரியூட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாவற்குழி, கைதடி பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த நபர் ஒருவரே, இந்தக் கொலையைச்  செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை கைதுசெய்த சாவக்கச்சேரி பொலிஸார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X