Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 07 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு, இன்று இடம்பெற்றது.
வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வை ஒத்திவைக்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த 2ஆவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு, அமர்வு இடம்பெற்றது.
வடமாகாண குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பாக ஆய்வுகளை நடத்துவதற்கு கடந்த மாதம் சிறப்பு அமர்வு ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் கேட்டிருந்தார். எனினும், அன்றைய தினமும் முதலமைச்சருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 28ஆம் திகதி, முதலமைச்சர் மேற்படி சிறப்பு அமர்வினை ஒத்திவைக்கும்படி கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும், அந்த மின்னஞ்சலில் இந்த அமர்வை ஒத்திவைக்கும்படி கேட்டுள்ளதுடன், இந்த அமர்வை நடத்துவதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
அந்த விடயம் சபை நடவடிக்கை குழுவில் ஆராயப்பட்டதற்கு இணங்க சிறப்பு அமர்வை ஒத்திவைக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது என கடந்த 01ஆம் திகதி முதலமைச்சருக்கு பதில் அனுப்பியுள்ளதாகவும் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திட்டமிட்டபடி சிறப்பு அமர்வு, இன்று நடைபெற்றது.
25 minute ago
27 minute ago
31 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
31 minute ago
34 minute ago