2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிவில் அங்கத்தவர்களுக்கு நீச்சல் பயிற்சி

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பொலிஸ் சிவில் சமூக அங்கத்தவர்களுக்கு நீச்சல் பயிற்சி, மாதகல் கடற்பரப்பில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து வருகை தந்த நீச்சல் துறைவீரர்கள் இப் பயிற்சி வகுப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் இளவாலை அச்சுவேலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை பகுதிகளை சேர்ந்த சிவில் அங்கத்தவர்களுக்கு மாதகல் கடற்பரப்பில் நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டது.

அதேபோல் பருத்தித்துறை கடற்பரப்பினுள் நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பொலிஸ் பிரிவினை சேர்ந்த சிவில் அங்கத்தவர்களுக்கு இப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

அவசர நிலைமையில் எவ்வாறு பொதுமக்களை காப்பாற்றுதல், நீர் நிலைகளில் வீழ்ந்தவர்களை எப்படி காப்பாற்றுவது போன்ற பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X