2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு கோரி போராட்டம்

Princiya Dixci   / 2021 மார்ச் 16 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

படுகொலை புரிந்தவர்களின் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்த  கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த, அதனை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்காக, தான் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு கோரியிருந்த போதிலும், இன்றுவரை தனக்கு அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு் ஆதரவாக, கண்டியைச் சேர்ந்த கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரால் யாழ். சுப்பிரமணியம் பூங்கா முன்னறில், இன்று (16), கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தி படுகொலை செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது என இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  இலங்கையில் குறிப்பாக வடக்கில் பல இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

கடத்தல்கள், படுகொலைகள் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தன்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவித்தவர், அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.

எதிர்கால இளைய சமுதாயத்துக்கு, கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை தெரியப்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர்,  அத்துடன், தற்போது படுகொலைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்களெனவும் அவர்களை கண்டறிந்து அவர்களை கைதுசெய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

"வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நீதி வேண்டும். எனினும், நான் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் உண்மை விடயம் தொடர்பில் சரியான தெளிவுபடுத்தல் வேண்டும் என்பதற்காகவே, நான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இந்தப் போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் என நினைக்காதீர்கள்" எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .