Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜனவரி 19 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற தம்பதிகளை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கு கடமை புரியும் ஊழியரே இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் ஓரிரு இடங்கள் சுரண்டப்பட்டு, அங்கு திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த தம்பதி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்துள்ளார்.
இதனை அவதானித்த கணவர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் ஓரிரு இடங்கள், சுரண்டப்பட்டு அங்கு கமெராக்களை பொருத்தி அதன் மூலமாக வீடியோக்கள் பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அங்கு கடமையாற்றியிருந்த ஊழியர்கள் சிலர் தலைமறைவாகிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
4 hours ago