2025 மே 02, வெள்ளிக்கிழமை

டக்ளஸின் விளக்கத்துக்கு சிரித்த சீன தூதுவர்

Niroshini   / 2021 டிசெம்பர் 16 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன், எம். றொசாந்த்

வடக்குக்கு, இரண்டு நாள்கள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர், யாழ். மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் விஜயத்தை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று(16) காலை 8 மணியளவில், அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.

அத்தருணத்தில், கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று பதிவானது.

அங்கு இருந்த பனை மரத்தைக் காண்பித்து, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதான் 'பல்மேறா' என தெரிவித்தார்.

இதன்போது சீன தூதுவர், பனை மரம் தொடர்பில் வினவினார்.

இதில் ரொடி(கள்) கிடைக்கும். 'அற்ககோல்' என சைகை மூலம் காண்பித்து, இது உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்கபடுத்தினார்.

அதற்கு தூதுவர் ஹா... ஹா.. என வாய்விட்டு சிரித்தார். அங்கிருந்தவர்களும் சிரித்துக்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X