Janu / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பகுதியில் கார் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 4 கிலோ 170 கிராம் தங்க கட்டி மீட்கப்பட்டு, இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சனிக்கிழமை (27) பதிவாகியுள்ளது .
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ-09 வீதியூடாக வவுனியாவுக்கு காரொன்றில் மேற்படி எடையுடைய தங்கம் கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த விசேட தகவல்களின் அடிப்படையிலேயே , கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
யது பாஸ்கரன்



6 hours ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
05 Nov 2025