2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’தடுப்பூசியைப் பெறுவது அவசியம்’

Niroshini   / 2021 ஜூன் 02 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமென, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி அ. ஜெயக்குமாரன் தெரிவித்தார்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கொரோனா  தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தம்மைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொருவரும் இந்த கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமென்றார்.

ஏனெனில், தங்களுக்கு கொரோனா தொற்று ஆபத்து ஏற்படும்போது, இந்த தடுப்பூசி பெற்றுக்கொள்வதனால் அந்த வைரஸினுடைய பாதிப்பு ஏற்படாடிதனவும், அவர் கூறினார்.

அத்துடன், 'ஏற்கெனவே முன்னைய காலங்களில் ஏதாவது  தொடர்ச்சியான ஒவ்வாமை இருப்பவர்கள், வைத்தியசாலைகளுக்கு சென்று தடுப்பூசிகளை கொள்வது மிகவும் சிறந்தது.

அவர்களைத் தவிர ஏனையோர் அனைவரும், தமக்குரிய தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் தம்மையும் எந்த சமூகத்தையும் பாதுகாத்து கொள்ள முடியும்' என்றும், ஜெயக்குமாரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X