2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தடை செய்யப்பட்ட வலைகள் மீட்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அரசரட்ணம்

நந்திக்கடலேரியில் இறால் பிடிப்பதற்காகப் போடப்பட்டிருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான, தடை செய்யப்பட்ட கூட்டு வலைகளை கைப்பற்றியுள்ளதாக கடற்றொல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நந்திக்கடலேரியில் தடை செய்யப்பட்டுள்ள கூட்டு வலைகளைப் பயன்படுத்தி இறால் பிடிப்பதில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, உதவிப்பணிப்பாளர் தலைமையில் மீனவ சங்கப்பிரதிநிதிகளுடன் அப்பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் வியாழக்கிழமை (19) குறித்த மீன் வலைகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த வலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான ஒழுங்குகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X