Freelancer / 2023 மார்ச் 31 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும் அவர்களுக்கு உதவிய அவர்களின் நண்பருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து மூவரும் கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை தங்களோடு மோசமாக நடந்து கொண்டதாலேயே அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரிடம் மகன்கள் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் உயர்தரத்தில் கல்வி பயிலும் 17 மற்றும் 19 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள் அருகில் இருந்த குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
கைதானவர்களை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். கரம்பகம் எல்.ஆர். தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய சிவசோதி சிவகுமார் என்பவர் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கடந்த இரண்டரை வருடங்களாக மனைவியை பிரிந்து தோட்டக் குடிசையிலேயே இவர் தனிமையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .