Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், ஆவரங்கால் சந்தியில், சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்று மோதியதில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானது.
நேற்று வியாழக்கிழமைக் காலை 7 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், புத்தூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவன், காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ஆவரங்கால், நவோதய பகுதியில், சட்டவிரோதமான முறையில், பாரவூர்திக்கு மண் ஏற்றப்படுவதாக, பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றிருந்தது. சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைவதை அறிந்துகொண்ட பாரவூர்தியின் சாரதி, அங்கிருந்து தனது வாகனத்தில் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது, புத்தூர் பகுதியில் இருந்து அச்சுவேலி நோக்கி, பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி மீது, அந்தப் பாரவூர்தி மோதியுள்ளது. இதன்போதே, மேற்படி மாணவன், படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளான்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்ததுடன், விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், பாரவூர்தி சாரதிக்கு எதிராக, விபத்தினை ஏற்படுத்தியமை மற்றும் மண் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்ய அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago