Editorial / 2022 ஜனவரி 13 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று (13) எடுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி வரை இவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் மேற்படி 43 தமிழக மீனவர்களும், இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன், 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago
1 hours ago