Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவின் தெரிவை, தமிழக அரசியல் தலைவர்களில் ஒருசிலர் தமது வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்கிறார்களெனத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, இது, தமது மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்காமல் மேலும் மேலும் துன்பத்துக்கு வழிவகுத்துவிடுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து, அவர், இன்று (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, புதிய ஜனாதிபதியை அணுகி, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய மாநிலங்களுக்குள்ள அதிகாரத்தை ஒத்த ஓர் அரசமைப்பைப் பெற்றுத்தர இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முயற்சிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களில் ஒரு சிலரினதும் புலம்பெயர் நாட்டுப் பிரமுகர்கள் சிலரினதும் அறிக்கைகள், இங்குள்ள தமது சகோதர இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் வலுவடையச் செய்யுமே தவிர, வேறு ஆக்கபூர்வமான எதையும் செய்யப்போவதில்லையெனத் தெரிவித்துள்ள அவர், இதை நீங்கள் உணர்ந்து, இன முறுகலை ஏற்படுத்தாதவாறு உங்கள் அறிக்கைகள் அமைய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீங்கள் அக்கறையெடுத்துச் செயற்பட விரும்புவீர்களேயானால், தாம் ஒரு புத்திஜீவிகள் அடங்கிய தூதுக்குழுவாக உங்களைச் சந்தித்து, உங்கள் ஆலோசனைகளைப் பெற்று, தமது பிரச்சினைக்கு ஒரு தீர்வை அடைய ஆர்வமுடன் இருப்பதாகவும், அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago