Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 02 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
வட மாகாண சபை தொடர்பாக, அண்மையில் எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான, விசேட கலந்துரையாடல் ஒன்று, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இன்று(02) காலை இடம்பெற்ற மேற்படிக் கலந்துரையாடல், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இளைஞர் அணி உறுப்பினர்கள் தவிர, இந்தக் கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
26 minute ago
30 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
44 minute ago