Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின் மூலம், தமிழ்த் தேசிய அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோமென்று, தென்னிலங்கையில் உள்ள சில அரசியல்வாதிகளால் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றனவெனச் சாடிய வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், இந்தத் தேர்தலில், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்த் தேசியம் எந்த வகையிலும் பின்னடைவைச் சந்திக்கவில்லையெனவும் கூறினார்.
இது தொடர்பில் தொரடந்துரைத்த அவர், தமிழ்த் தேசியம் அதே நிலையில் தான் இருக்கின்றதெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஓர் உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியைச் சேர்ந்த இருவரும் தமிழ்த் தேசியத்தைச் சேர்ந்தவர்கள்தானெனவும் கூறினார்.
அப்படிப் பார்த்தால், ஆட்கள் மாறி இருக்கிறார்களே தவிர, கோட்பாடுகள் அல்லது தமிழ்த் தேசியம் மாறவில்லையெனத் தெரிவித்த அவர், தங்களை விட்டுப் பிரிந்துச் செல்லவில்லையெனவும் கூறினார்.
ஏதோவொரு வகையிலே தேர்தல் காலத்தில் சில விடயங்கள் நடைபெற்றிருக்கின்றனவெனவும் அதுவே, தங்களுடைய அரசியலாக இருக்க முடியாதெனவும், சிவஞானம் கூறினார்.
ஆகவே, தாங்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியம் சார்ந்து எல்லாரும் போராடுவோமெனத் தெரிவித்த விமல் வீரவன்ச கூறுவதைப்போல, தமது தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டது அல்லது தோற்கடித்து விட்டோம் எனக் கூறுவது தவறான விடயமெனவும் கூறினார்.
இதேவேளை, முன்னாள் போராளிகளுக்கு இனி எந்தவித உதவியும் அரசாங்கத்தால் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் கூறிய சிவஞானம், அரசாங்கத்திடம், முன்னால் சொன்னதைப் பின்னால் மறுதலிக்கிற ஒரு கோட்பாடு இருக்கின்றதென்றார்.
மனிதநேய அடிப்படையிலாவது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய தேவை இருக்கின்றதெனவும் அது அரசாங்கத்தின் கடமையெனவும், சிவஞானம் கூறினார்.
12 minute ago
18 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
40 minute ago