Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூன் 26 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்சன்
தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அர்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பார்க்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினாரா? என கேள்வி எழுப்பியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
அதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக தனக்கு தெரியவில்லை எனவும் உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவும் தெரிவித்தார்.
சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.
தமிழ் சமூகத்தில் மாமா என்ற உறவுக்கு ஒரு அந்தஸ்த்து இருக்கின்றது. மரியாதை இருக்கின்றது. அதை சுட்டித்தான் கூறினாரா? அல்லது வேறு அர்த்தத்தில் கூறினாரா? என்பது தொடர்பாக எனக்கு தெரியவில்லை.
உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே சரியாக என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எங்களை பொறுத்தளவில் நாங்கள் மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசாங்கத்துடன் பேசுகிறோம். ஒரு அரசியல் தரப்பாக மக்களுடைய ஆணையை பெற்ற தரப்பாக எங்களுக்கு அந்த பொறுப்பும் கடமையும் இருக்கின்றது.
நாங்கள் பேசுகிறோம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு பேசாமல் இருக்க முடியாது. அந்த பேச்சுக்களில் அரசு கூறும் விடயங்களை நாங்கள் மக்களுக்கு கூறுகிறோம். அது நடக்காதவிடத்து அதற்கான ஒட்டுமொத்த பொறுப்பும் எங்களுடைய தலையில் சுமத்தப்படாது. இதனை எந்த அரசியல் தரப்பும் மக்கள் ஆணையை பெற்ற எந்த தரப்பும் செய்யும் செய்ய வேண்டும்.
எந்த அரசியல் கட்சிகளும் மக்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற போது மக்கiளுடைய பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டியது அதற்காக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியது போராட்டங்களை நடாத்த வேண்டியது அந்தக் கட்சிகளினுடைய கடமை.
அதனையே நாங்கள் செய்கின்றோம். ஆகவே அதற்கு மேல் மாமா வேலை என்ன என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago