Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் தற்போது கணவன் மனைவி ஆகிய இரண்டு தாதியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் வைத்திய சேவையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதோடு, கணவன் மனைவியான தாதியர்களும் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தர்மபுரம் வைத்தியசாலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அடுத்தாக அதிகளவு நோயாளர்கள் சிகிச்சை பெற்று செல்கின்ற வைத்தியசாலையாக காணப்படுகிறது. இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் இரண்டு தாதியர்களே கடமையில் உள்ளனர். இவர்களில் ஒருவர் மாறி ஒருவரே கடமையாற்றுகின்றனர். இதனால் முழுமையான சேவையினை வழங்க முடியாதுள்ளது.
அத்தோடு, ஓய்வு பெற்ற தாதியர் ஒருவரை மீள் நியமனம் பெற்றுத்தரலாம் என கூறி மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட போதும் அவருக்கு உறுதியளித்தப்படி 5 மாதங்களுக்கு மேல் மீள்நியமனமோ கொடுப்பனவுகளோ வழங்கப்படவில்லை. இதனால் அவர் பணியிலிருந்து கடந்த மாதம் விலகிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமாரவேலிடம் வினவிய போது, “தர்மபுரம் வைத்தியசாலையில் நான்கு தாதியர்கள் கடமையில் இருக்க வேண்டும். ஆனால் இருவர் மாத்திரமே உள்ளனர். இது தொடர்பில் நாம் உரிய இடங்களுக்கு அறிவித்திருகின்றோம்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .