Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் - பொன்னையா ஒழுங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன், அதே பகுதியைச் சேர்ந்தவரெனவும் 27 வயதுடையவரெனவும், யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்த குறித்த இளைஞன், 45,000 ரூபாய் பெறுமதியான மடிக்கணினி, அலைபேசி என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நபரை கைதுசெய்தனர்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026