Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 07 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
பொருட்களை விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தை பயன்படுத்தி, திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் வைத்து, பொன்னாலை இளைஞன் ஒருவரின் துவிச்சக்கர வண்டி திருட்டு போயிருந்தது.
இது தொடர்பில் அன்றைய தினமே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் பிரபல இணையத்தளம் ஒன்றில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி விற்பனை செய்யப்படவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
அதனை அவதானித்த துவிச்சக்கர வண்டியின் உரிமையாளர், விளம்பரத்தில் இருந்த தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு, துவிச்சக்கர வண்டியை வாங்கவுள்ளதாக கூறி விலையை பேசி தீர்மானித்து சங்கானை பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
அதனை நம்பி துவிச்சக்கர வண்டியை உரிமையாளரிடமே விற்க வந்த நிலையில் மடக்கிப் பிடித்தனர்.
விற்பனைக்கு கொண்டு வந்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , வைரவர் ஆலய இசை நிகழ்ச்சிக்கு தாம் வந்திருந்த போது , தம்மிடம் ஒருவர் இந்த சைக்கிளை 8ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தததாகவும் , அதனையே தாம் வாங்கி மீள விற்பனை செய்வதற்காக விளம்பரப்படுத்தியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சைக்கிளை விற்பனை செய்ய வந்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
49 minute ago
59 minute ago