2025 மே 21, புதன்கிழமை

‘திறமையானவர்களை விட்டுவைக்க மாட்டார்களா?’

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தில், நல்லவர்களையும் திறமையானவர்களையும் விட்டுவைக்க மாட்டார்கள் போலத் தெரிகிறதென, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரச ஒசுசல மருந்தகத் திறப்பு விழா மற்றும் மீள்வாழ்வு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு என்பன, இன்று (16) காலை நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இருதய அறுவைச் சிகிச்சைகள் இடம்பெறுகின்ற நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் நான்கில் ஓரிடத்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் பெற்றிருக்கிறதெனத் தெரிவித்த அவர், இங்கு இருக்கின்ற சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, தான் அறிவதாகவும் குறிப்பிட்டார்.

நல்லவர்களையும் திறமையானவர்களையும் இங்கு விட்டுவைக்க மாட்டார்கள் போலத் தெரிகிறதெனக் குற்றஞ்சாட்டிய அவர், நற்சேவை செய்து வருபவர்களை, தயவுசெய்து தொடர்ந்து இங்கு சேவைசெய்ய வழிவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், வடபகுதி வைத்தியர்களின் குறைபாடுகளையும் பிரச்சினைகளையும் அறிந்து, அவர்களுக்குச் சுகாதார அமைச்சர் உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும், முதலமைச்சர் வலியுறுத்தினார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .