2025 மே 01, வியாழக்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான ஈ.பி.டி.பி செயலாளர் உயிரிழப்பு

Janu   / 2024 ஜூலை 01 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சந்தேகத்திற்கிடமான முறையில் தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் , யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) உயிரிழந்துள்ளார். 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச நிர்வாக செயலாளரான பவானி என அழைக்கப்படும் வடமராட்சி கிழக்கை சேர்ந்த சரவணபவானந்தன் சிவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி , தனது மீன் வாடியில் தூக்கத்தில் இருந்த போது திடீரென உடலில் தீப்பற்றிய நிலையில் , அலறியபடி வெளியே ஓடி வந்துள்ளார் . அப்போது அயலவர்கள் தீயினை அணைத்து , அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

அவர் தூங்கிக்கொண்டிருந்த போது இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டினை வீசி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகப்படும் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எம்.றொசாந்த்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .