2025 மே 07, புதன்கிழமை

’ தீர்மானங்களின் விளைவுகளை தவிர்க்க முடியாதுள்ளது’

Niroshini   / 2021 ஜூன் 16 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மாகாண சபைகளால் நிர்வகிக்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்புக்கு முரணானது என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களே இவ்வாறான நிலைமைக்கு காரணம் என்று தனது ஆதங்கத்தையும் வெளியிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், தமிழ்  மக்களின்  அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்கள் மாகாண சபைக்கு பகிரப்பட்டுள்ளதென்றார்.

குறித்த அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், மாவட்ட பொது வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் மகப்பேற்று நிலையங்கள் போன்றவை மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

இந்நிலையில், அவற்றை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வது அரசியலமைப்புக்கு முரணானது என்பதுடன் மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்ற மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செயற்பாடாகவும் அமையும் என்றும் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்

கடந்த காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அக்காலப் பகுதியில் தனக்கிருந்த அரசியல் பலத்தைப் பயன்படுத்தி, மாகாண சபைக்கு பகிரப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்வதை தடுத்து நிறுத்தியதாகவும், அவர் கூறினார்.

'எனினும், தற்போதைய அரசியல் சூழலில் இவ்வாறான விடயங்களை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் பலம் தன்னிடம் இல்லையெனவும் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களின் விளைவு, இவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது' எனவும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X