2025 மே 22, வியாழக்கிழமை

தெற்கில் உள்ள சுதந்திரத்தை ‘வடக்கு மக்கள் அனுபவிக்க வேண்டும்’

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

தெற்கில் காணப்படுகின்ற சுதந்திரத்தை, வடக்கில் வாழ்கின்ற மக்கள் அனுபவிக்க வேண்டுமெனத் தெரிவித்த நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள, வடக்கில் இருப்பது போல தெற்கிலும் இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின், வடமாகாணத்துக்கான அலுவலகம், நேற்று (30) மாலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப் -படுத்தப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்ததோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில், 2016, 2017ஆம் ஆண்டுகளில் நீதிமன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் -பட்டிருக்கின்றன எனவும், வருகின்ற ஆண்டுக்குள் அவை முடிவடையும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில், புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றனவெனத் தெரிவித்த அவர், எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 3ஆம் திகதி, புதிய நீதிமன்றத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஏனைய பகுதிகளில் காணப்படுகின்ற வசதிகளை, வட மாகாணத்திலும் ஏற்படுத்துவதற்கு, தாங்கள் தயாராக இருப்பதாகவும், அங்கு அவர் மேலும் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .