Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
செல்வசந்நிதி ஆலய தேர்த்திருவிழாவின் போது, 15 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.
செல்வசந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா, நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது நாட்டின் பல பாகங்களில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஏற்பட்ட சன நெரிசலை பயன்படுத்தி, திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
அதாவது, ஆலயத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த வல்வெட்டித்துறை பொலிஸ் காவலரனில், நேற்றைய தினம் காணப்பட்ட சனநெரிசலைப் பயன்படுத்தி 6 பேர் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை திருடர்கள் அறுத்துள்ளனர்.
இது தொடர்பில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
களவாடப்பட்ட நகைகள் 15 பவுண் எனவும் அவற்றின் பெறுமதி சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025