Editorial / 2022 மே 08 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விஹாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, வருகை தந்தார்.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் படைத் தலைமையகத்துக்கு இன்று காலை வருகை இராணுவத் தளபதி, விஹாரைக்குச் சென்று கட்டுமானப் பணிகளை நேரில் ஆராய்ந்தார்.
வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விஹாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் கட்டுமானப் பணிகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
எனினும் கடும் எதிர்ப்பையும் மீறி காங்கேசன்துறை திஸ்ஸ ரஜமஹா விஹாரை அமைக்க இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டது.
விஹாரை கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் விஹாரையின் கட்டுமானப் பணிகள் தொடர்பில் இராணுவத் தளபதி என்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். (R)
16 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
4 hours ago