2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமக்கான நியமனத்தை வழங்கக் கோரி, தொண்டர் ஆசிரியர்களால், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால், இன்று (22) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், வடக்கு ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சார்ள்ஸை சந்தித்துக் கலந்துரையாடினர். 

ஆயினும், குறித்த சந்திப்பில் தமக்குச் சாதகமானப் பதில்களை ஆளுநர் வழங்கவில்லையென்றும் ஆளுநரின் பதில்கள் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் சாடினர். 

இதனால், தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும், தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X