2025 மே 19, திங்கட்கிழமை

தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருடப்பட்ட பொருட்கள் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

கடந்த 06ஆம் திகதி கிளிநொச்சி நகரில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் திருடப்பட்ட பெரும் தொகைப் பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

 சம்பவத்தின் போது சி.சி.ரி. கமராவில் பதிவான காட்சிகளை ஆதரமாக வைத்துக்கொண்டு கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்துக்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 43 கைத்தொலைபேசி, கடையின் கதவை உடைப்பதுக்கு பயன்டுத்தப்பட்ட அலவாங்கு என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X