Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 25 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வட்டுக்கோட்டை - சங்கரத்தை குளத்துக்கு அருகில், வியாழக்கிழமை (22) இரவு, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவரும் அவரது நண்பரும் பிறிதொரு கட்சி உறுப்பினரின் தலைமையிலான குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான உறுப்பினர், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான தேவராஜா ரஜீவன் என்பவராவார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த உறுப்பினரும் அவரது நண்பரும் சங்கரத்தைக் குளத்துக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குச் சென்ற போது, குளத்துக்கு அண்மையில் நின்ற சுமார் 40 பேர் கொண்ட கும்பலான்று, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்வதில் பொலிஸார் அசமந்தப்போக்கைக் கடைப்பிடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .