Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் இக்கண்காட்சி ஆலய வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மாலை 5 க்கு ஆரம்பமாகவுள்ள இக்கண்காட்சியை வட மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வடக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விவசாயம் அதிக அளவுக்கு செயற்கை உரங்கள், கிருமிநாசினிகளையும் பயன்படுத்தும் செறிவு வேளாண்மை ஆகும். இந்த இரசாயனங்கள் உணவின் மூலம் உடலை அடைந்து கேடுகளை விளைவிப்பதோடு, நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி வருகிறது.
இவற்றைத் தடுப்பதற்கு நஞ்சுகளைப் பயன்படுத்தாத உணவு உற்பத்தி முறையை நோக்கி, நாம் மீளவும் நகர வேண்டியுள்ளது. இது தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விவசாய இரசாயனங்களுக்கு மாற்றீடாக சேதனப் பசளைகள் மற்றும் இயற்கை முறையிலான பீடைகொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் தொனிப்பொருளில் வடக்கு விவசாய அமைச்சு ஆண்டுதோறும் இக்கண்காட்சியை நடத்திவருகிறது.
இக்கண்காட்சியில் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் காட்சிக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, நடுகைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள் மற்றும் இயற்கைப் பழரசமென்பானங்கள் ஆகியவற்றின் விற்பனை மையங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் பார்வையாளர்களிடையே விவசாயம்; தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டு சரியாக விடையளிப்போருக்குப் பயன்தரும் மரக்கன்றுகளும் தினமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
திங்கட்கிழமை ஆரம்பமாகும் இக்கண்காட்சி பூங்காவனத் திருவிழா நடைபெறும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை தினமும் பிற்பகல் 2 மணியிலிருந்து 8 மணிவரை நடைபெறவுள்ளது. விசேட திருவிழா நாட்களான தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவனத் திருவிழா நாட்களில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 8 மணிவரையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago