Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
“நாங்கள் எப்போதும் உண்மையையே கூறுவோம். அந்த உண்மைகள் கடுமையானதாக இருக்கின்ற போது கடுமையான முடிவுகளை எடுப்போம். அதற்கமையவே புளொட் மற்றும் ஈ.பீ.ஆர்.எல்.எப். ஆகிய அமைப்புகளை தமிழ் மக்கள் பேரவையில் இருந்து வெளியேற்றுமாறு கோரியிருக்கின்றோம். இதற்கான பதில் அடுத்த கூட்டத்தில் வெளியிடப்படும் வரை காத்திருக்கின்றோம்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதியஅரசமைப்பு இடைக்கால அறிக்கைக்கான ஆணையைக் கேட்டுத் தான் போட்டியிட்டிருந்தனர். அதுதான் அவர்களின் பிரதான கோரிக்கையாக அந்தத் தேர்தலில் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதில் புளொட் அமைப்பு கூட்டமைப்போடு சேர்ந்துதான் போட்டியிட்டது. அதேநேரம், தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டம் தயாரித்திருக்கிறது. ஆதனை முற்றிலும் நிராகரித்து அதற்கு நேர்மாறாக இருக்கக் கூடிய ஒற்றையாட்சி அரசமைப்பை உருவாக்குவதுக்கு புளொட் அமைப்பு செயற்பட்டது மட்டுமல்ல, அதற்கு ஆணையைக் கேட்டும் தேர்தலில் போட்டியிட்டது.
இது அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையை மீறுகின்ற விடயமாக அமைந்திருப்பதால் புளொட் அமைப்பை பேரவையில் இருந்து வெளியேற்ற வேண்டுமென் நாங்கள் கோரியுள்ளோம்” என தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago