2025 மே 19, திங்கட்கிழமை

நாணயத்தாள்களில் பொருட்களைக் கொள்வனவு செய்தோர் கைது

Editorial   / 2018 நவம்பர் 24 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்து வந்த இரண்டு இளைஞர்கள், கொடிகாமம் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மந்துவில் கிழக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 19, 21 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 1ஆம் திகதி சந்தை வீதி, கொடிகாமத்தில் உள்ள சிறு வர்த்தக நிலையத்தில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாளை கொடுத்து 500 ரூபாய்க்கு  சிகரட், அலைபேசி மீள்நிரப்பு அட்டை என்பவற்றை பெற்றுக் கொண்டு 4,500 ரூபாய் மிகுதிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் கடை உரிமையாளர் அந்த 5,000 ரூபாய்ப் பணத்தை மொத்த பொருட் கொள்வனவு நிலையமொன்றில் வழங்கிய போது, அது போலி நாணயத்தாள் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இது தொட‌ர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி அன்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில், 5,000 ரூபாய் போலி நாணய தாளை வழங்கி இரு இளைஞர்கள் எரிபொருள் நிரப்பியுள்ளனர். 

அது தொடர்பிலும் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அங்கிருந்த சி.சி.டி.வி கமெராவில் பதிவுகளை சோதனை செய்தபோது  இரண்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X