Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 15 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
நந்திக்கடல், நாயாறு களப்புக்கின் புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் - காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.
நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக, இன்று (15) நடைபெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, நக்டா, நாரா மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றுக்கு டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.
இதன்போது, முல்லைத்தீவு, நந்திக்கடலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், நந்திக்கடல் அபிவிருத்தித் திட்டம் குறித்து வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
அதேபோன்று, நாயாறு களப்பு அபிவிருத்திக்கான விலை மனுக் கோரல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விலைமனுக் கோரல் தொடர்பான விளம்பரங்களை அமைச்சின் இணையத் தளத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்து வேலைகளை ஆரம்பிக்குமாறு, அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோன்று, ரெக்கவ களப்பு அபிவிருத்தித் திட்டம் மதிப்பீட்டுக்காக பிரதேச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அருகம்பே களப்பு தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அதிகாரிகள், அனுமதி கிடைத்தவுடன் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திற்குரிய பாணம மற்றும் பாணகல களப்புகளின் அபிவிருத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் புத்தளம், சிலாபம், முந்தல் ஆகிய களப்புகளும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அதிகாரிகளிடம் டக்ளஸ் எடுத்துரைத்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பூநகரி களப்புகளில் இறால் வளர்ப்பு தொடங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நக்டா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், காக்கைதீவு களப்பு தூர்வாரப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர், அதற்கான நிதியை திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், நடெங்கிலுமுள்ள பிரதான 09 களப்புகளின் அபிவிருத்திக்கான திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் வகுத்து, அப்பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago