2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

“நீண்டகால காத்திருப்பு மன வடுக்களை ஆழமாக்கியுள்ளது”

Editorial   / 2018 மார்ச் 14 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற்போகச் செய்யப்பட்டோரினதும் மற்றும் காணாமல் போனவர்களினதும் குடும்பங்கள் ஆகியன தமது அன்புக்குரியவர்களின் கடுந்துயரமான இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ள காணாமற்போன ஆட்களை பற்றிய அலுவலகம், “தமது அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பதற்கான பதில்களுக்காக, ஆண்டுக்கணக்காகவும், தசாப்தங்களாகவும் இக்குடும்பங்களின் பெரும்பாலானவை காத்திருக்கின்றன.

இந்த நீண்டகால காத்திருப்பு, அவர்களது துன்பத்தையும், விரக்தியையும், மன வடுக்களையும் ஆழமாக்கியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.   

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், தன்னுடைய முதலாவது ஊடக அறிக்கையை, மார்ச் 12ஆம் திகதியன்று அனுப்பிவைத்தது.   

அந்த அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கை​யொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பு பேரவை, நாடாளுமன்றத்தின் பலவகையான அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பரிந்துரையின் நிமித்தம் 2018 பெப்ரவரி அன்று ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நியமனத்தைத் தொடர்ந்து, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், உத்தியோகபூர்வமாகக் கடமைகளை ஆரம்பித்துள்ளது.   

“இலங்கையில் பல தசாப்தங்களாக ஏற்பட்ட மோதல்களின் போது காணாமல்போன அல்லது காணாமல்போகச் செய்யப்பட்ட அன்புக்குரியவர்கள் குறித்து, நாட்டின் சகல பாகங்களிலும் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வேதனைகளைக் கவனத்திற்கெடுப்பதே, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிரதான நோக்கமாகும்.  

“சகல பாதிக்கப்பட்டவர்களும் சேவையாற்றுவதற்காக கா.ஆ.அ தாபிக்கப்பட்டுள்ளதால், இனம், மதம் மற்றும் பிராந்தியம் ஆகியவற்றுக்கு அப்பால், காணாமல்போன மற்றும் காணாமல்போகச் செய்யப்பட்ட ஆட்களின் அநேக விடயங்களை, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலம் கவனத்திலெடுக்கும். காலம் கடந்த போதிலும், அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களால் பல ஆணைக்குழுக்கள் தாபிக்கப்பட்ட போதிலும், தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அறியாமல், இக்குடும்பங்களின் பெரும்பாலானவை வேதனைப்படுவதுடன், உண்மைக்கான தொடர்ச்சியான தேடலொன்றிலும் ஈடுபட்டுள்ளன.  

“இலங்கையில் இடம்பெற்ற மோதல்களின்போது பலதரப்பட்ட ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, இராணுவ நடவடிக்கைகளின்போது காணாமல்போனதாக அடையாளம் காணப்பட்டுள்ள இராணுவ அங்கத்தவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் பெருமளவு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள், போராளிகள் ஆகியோர் பற்றிய முறைப்பாடுகளை காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.  

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டத்துக்கு அமைய : (1) காணாமற்போன மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்ட ஆட்களைத் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்ற சூழ்நிலைகளைத் தெளிவுப்படுத்துதல் (2) காணாமற்போனவர்களினதும் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களினதும் அவர்களது அடுத்த உறவினர்களதும் உரிமைகளையும், அக்கறைகளையும் பாதுகாத்தல் (03) பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தின் வழிவகைகளை அடையாளங்காணுதல் மற்றும் (04) அத்தகைய சம்பவங்கள் மீள் நிகழாமையை தடுக்கும் முகமாக அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அகாரிகளுக்கு பரிந்துரைகளைச் செய்தல் என்பன காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளாகும்.  

“காணாமற்போகச் செய்யப்பட்ட குடும்பங்களின் சார்பில் உறுப்பினர் ஒருவர் மற்றும் ஓர் இளைப்பாறிய இராணுவ சட்ட ஆலோசகர் உட்பட செயல் ஆர்வலராகவும், அரசாங்க சேவையாளராகவும் அத்துடன் தொழில் நிபுணத்துவம், மனித உரிமைகள் துறையில் அனுபவத்தைக் கொண்ட தனிப்பட்டவர்கள் ஆகியோரைக் கொண்ட சமூகத்தின் பிரதிபலிப்புகளை காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏழு உறுப்பினர்களாக நாம் பிரதிநிதிப்படுத்துகின்றோம்.   

“இலங்கையின் மோதல்களில் பாதிக்கப்பட்ட சகலரின் சேமநலனுக்கு நாம் ஆழமான அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பதுடன், நாடாளுமன்றத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் குறித்து நாம் உணர்வுப்பூர்வமாக உள்ளோம். எமது பணிகளைப் பாரபட்சமின்றியும், நல்நோக்கத்துடனும் நிறைவேற்றுவதற்கான அவசியத்தையிட்டு நாம் கவனத்துடன் உள்ளோம். மேலும், காணாமற்போனவர்களுக்கும், காணாமற்போகச் செய்யப்பட்டவர்களுக்கும் அத்துடன், அவர்களின் குடும்பங்களுக்கும் எமது கட்டுபாடுகள் இந்த முயற்சியில் முக்கியமானதாகும்.   

“பிரச்சினையின் பரிமாணத்தையும் அத்துடன், காணாமற்போனவர்களுக்கும், மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களுக்குமான தேடலுக்கு அவசியமான பல்வேறு பணிகள் சம்பந்தமான சிக்கலானத் தன்மையையும் சட்டமாக்கப்பட்டவாறு, நிரந்தரமான அலுவலகமொன்றாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் செயற்படும். அதன் வடிவமைப்பில் விசாரணை மற்றும் தேடுதல் ஆகியனவற்றுடன் பணிக்கப்பட்டுள்ள நிரந்தரமான நிறுவனமொன்றாக விளங்குவதற்கு, ஒரேகாலத்தில் தற்காலிகமானதும் அத்துடன் ஆவணப்படுத்துவதற்கும், பரிந்துரைப்பதற்கும் பெரிதுமே தொண்டாற்றுகின்றதான காணாமல் போகச் செய்தல் குறித்து கையாள்வதற்கான முன்னைய அரசாங்க பொறிமுறைகளிலிருந்து காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வித்தியாசமானதாகும்.   

“பெருமளவு பாதிக்கப்பட்ட ஆட்களுக்கும், சமூகங்களுக்கும் நிவாரணத்தை வழங்குகின்ற நம்பகமானதும், செயற்றிறனானதும் அத்துடன் பலமானதுமான நிறுவனமொன்றை தாபிப்பதே தற்போதைய உறுப்பினர்களின் பணியாக விளங்கும்.  

“அவ்வாறு செய்கையில், காணாமல்போகச் செய்தல்களைப் பரிசீலிப்பதற்கும் விசாரிப்பதற்கும் முன்னைய ஆணைக்குழுக்களின் முயற்சிகள் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நடைமுறைகளினதும், கட்டமைப்புக்களினதும் வடிவமைப்பு அறிவிக்கும் என்பதை கா.ஆ.அ உறுதிப்படுத்தும். மேலதிகமாக, நல்லிணக்கப் பொறிமுறைகள் மீதான கலந்துரையாடல் செயற்பணிக்குச் செய்யப்பட்ட முக்கியமான பரிந்துரைகளை கவனமாக கரிசனைக்கொடுக்கின்ற அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுடனும், வேறு பங்காளர்களுடனும் பேசி கலந்துரையாடலூடான அணுகுமுறையொன்றை கா.ஆ.அ பயன்படுத்தும். கா.ஆ.அ ஒன்று என்பதையும், எமது தேசத்தினுள் நல்லிணக்கத்தினையும், நிரந்தரமான சமாதானத்தினையும் உறுதிப்படுத்துவதற்கு, அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்ட பல நடவடிக்கைகளில் இது ஒன்று என்பதையும் அங்கிகரிப்பது முக்கியமானதாகும்.  

“அத்தகையதொரு பொறிமுறையைத் ஸ்தாபிப்பது காலங்கடந்ததாகும் என்பதை நாம் ஏற்றுகொள்கின்றோம். காணாமற்போகச் செய்யப்பட்டோரினதும் மற்றும் காணாமல் போனவர்களினதும் குடும்பங்கள் ஆகியன தமது அன்புக்குரியவர்களின் கடுந்துயரமான இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன.   

“தமது அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பதற்கான பதில்களுக்காக ஆண்டுக்கணக்காகவும், தசாப்தங்களாகவும் இக்குடும்பங்களின் பெரும்பாலானவை காத்திருக்கின்றன.   

“இந்த நீண்டகால காத்திருப்பு அவர்களது துன்பத்தையும், விரக்தியையும், மன வடுக்களையும் ஆழமாக்கியுள்ளது.   
“நிலையான சமாதானத்துக்கும், இணை-வாழ்வுக்குமான பங்கிடப்பட்ட தொலைநோக்கு குறித்து நாம் நம்பிக்கை கொண்டிருப்பதால், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் நோக்கங்களை சாதிப்பதற்கு எமக்கு பலத்தையும், ஆதரவையும் வழங்குமாறு இலங்கையின் மக்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .