Niroshini / 2022 ஜனவரி 02 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
நண்பர்களுடன் காரைநகர் கசூரினா கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவன், அலை அடித்துச் சென்றதில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் - தில்லையம் பதியை சேர்ந்த யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கற்றுவரும் யோகராசா யோகீசன் (வயது - 17) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
புத்தாண்டு தினமான நேற்று (1), கோண்டாவிலை சேர்ந்த 20 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று, சுற்றுலாவாக காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்றிருந்தது.
இவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இருவரை கடல் அலை அடித்துச் சென்றது.
இளைஞர்களின் உதவிக்குரல் கேட்டு அப்பகுதியில் நின்றிருந்த கடற்படை ஓர் இளைஞரை காப்பாற்றியது. மற்றைய சிறுவனை அப்பகுதி மீனவர்களும் சேர்ந்து நெடுநேரம் தேடியது.
நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago