Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணப் பிரதேசச் செயலக எல்லைக்குட்பட்ட நிதி நிறுவனங்களில், நுண்கடன் பெற்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென, நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பிரதேசச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேசச் செயலக மண்டபத்தில் நேற்று (13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில், தொடர்ந்து கருத்துரைத்த அவர், அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், 1 இலட்சம் ரூபாய் வரையிலான நுண்கடனைப் பெற்று, அதனைச் செலுத்த முடியாமல் இருப்பவர்களின் கடனை, அரசாங்கம் செலுத்துவதற்கு இணங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாநகர முதல்வர், வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், தங்கள் தேவைகளுக்காக வங்கியில் கடன் பெற்றிருப்பார்களெனவும் அதனை நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் பெறும்போது குறிப்பிடுவதில்லையெனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, கூடுதலான இடங்களில் கடன்களைப் பெற்றவர்கள் தொடர்பாக இந்த இடத்தில் எதனையும் கூற இயலாததெனவும் அதனை அரசாங்கத்துடன் பேசியதன் பின்னரே கூற இயலுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், இங்கு பேசப்பட்ட இந்த நுண்கடன் தொடர்பான விடயங்களை பதிவுசெய்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, திறைசேரி அதிகாரிகளையும் வைத்து பேசித் தீர்மானங்களை எடுக்கலாமென, அவர் மேலும் தெரிவித்தார்
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025