2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’நுண் கடன் திட்டம் தடை’

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மக்­களது வாழ்வுக்கு குந்­த­க­மாக அமை­யும் நுண் கடன் திட்டத்தை தடை செய்­யு­ம் முகமாக, வேலணை பிரதேச சபையால் நேற்று முன்தினம் (01) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வேலணை பிரதேச சபைத் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடன் திட்­டம் என்­னும் பெய­ரி­ல் நுண்கடன் திட்டம் வேலணை பிரதேச மக்களின் வாழ்வை சிதைத்து வருகின்றது. இதனால் பல வழிகளிலும் துன்பங்களை சந்தித்து வாழ்ந்துவரும் எமது மக்கள் மேலும் சொல்லணா துயரத்தை சந்திக்க நேரிடுகின்றது.

இதனால் நுண்கடன் திட்டத்தை வேலணை பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பட்டவர்களிடமிருந்தும் முன்வைக்கப்பட்டு வந்தது.

இதன்பிரகாரம் குறித்த விடயம் சபையின் விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, சபை அதற்கான அங்கிகாரத்தை வழங்கியது என்றார்.

அத்துடன், வீதியோரங்களில் திரியும் கால்நடைகள் வேலணை பிரதேச சபையால் பிடிக்கப்படும் என்றும் வீதிகள் ஒழுங்கைகளில் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X