2025 மே 14, புதன்கிழமை

நெடுங்குளம் காணி சுவீகரிப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை-நெடுங்குளம் பகுதியில், பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்தக் காணிகளை அளவிடுவதற்காக இன்று (21) சென்ற யாழ்ப்பாண நில அளவைத் திணைக்களத்தினரை, காணிகளை அளவீடு செய்ய விடாமல், அங்குள்ள மக்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதன்போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சுதர்சன் மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

எனினும், பிரதேச மக்களும் சில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து, காணி அளவீடுகளை மேற்கொள்ளாமலேயே, அதிகாரிகள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதேச செயலாளர், பொது மக்களின் எதிப்புக்களால் இந்த அளவீடுகளை நிறுத்தப்பட்டதாகவும் இனி அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .