Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 18 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பு மற்றம் நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்துக்குள் மட்டுப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில் இன்று (18) கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி, டிப்புா சந்தியில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெண்கள், ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் மகஜர் வாசிக்கப்பட்டு, அரசாங்க அதிபரிடம் மகஜரைக் கையளித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை இடம்பெற்ற வரும் நிலையில், குறித்த நெல்லை வெளி மாவட்டங்களுக்கு சந்தைப்படுத்தாது, மாவட்டத்துக்கு உள்ளேயே சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பேரணியில் ஈடுபட்டவர்களால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
நாட்டில் தற்போதுள்ள பொருள்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், அதற்கு ஏற்ற வகையில் அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago